வீட்டுக் கல்வி முறை என்ற இந்தக் கட்டுரையின் மூலம் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

1. உலகில் பல கல்வி முறைகள் இருக்கின்றன. இதில் எந்தக் கல்வி முறை சிறந்தது?

2. வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்வதற்கு கல்வி தேவையா?

3. படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் துன்பமும், துயரமும் சமமாக வருகிறதே ஏன்?

4. கல்வியில் புரட்சி தேவையா?

5. கல்வி சீர் கெட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். அதைக் கெடுத்தது யார்? அவர்களின் நோக்கம் என்ன? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு இங்கு நாம் விடைக்காண இருக்கிறோம். இந்தக் கட்டுரையைக் கல்விப் புரட்சி என்றே கூறலாம்.


கல்வி என்றால் என்ன?

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை விசயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு அமைப்பிற்குப் பெயர் தான் கல்வி. அதாவது ஒரு மனிதன் அமைதியாக, நிம்மதியாக, சந்தோசமாக, ஆரோக்கியமாக, நல்ல தொழில் செய்து வியாபாரம் செய்து குடும்பத்துடன் வளமாக அதே சமயத்தில் ஒழுக்கத்துடன் நன்னெறியுடன், அறத்துடன், தர்மத்துடன் வாழ்வதற்குத் தேவையான எல்லா நல்ல விசயங்களையும் கற்றுக் கொள்ளும் முறைக்குப் பெயர் தான் கல்வி.

ஆனால் இப்பொழுது பல்வேறு கல்வி முறை மூலம் கற்றவர்கள், அமைதியாக, நிம்மதியாக, சந்தோசமாக இருக்கிறார்களா என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். கண்டிப்பாக இல்லை என்ற பதில்தான் வரும். ஏன்? படித்தவர்களுக்கும் நோய் வருகிறது. படிக்காதவர்களுக்கும் நோய் வருகிறது.

படித்தவர்களும் பிச்சை எடுக்கிறார்கள். படிக்காதவர்களும் பிச்சை எடுக்கிறார்கள். படித்தவர்களும், படிக்காதவர்களும் குடும்பத்தில் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

படித்தால் தான் அதாவது கல்வி கற்றால் தான் இந்த உலகத்தில் வாழ முடியும் என்று ஒரு கட்டாயம் நிச்சயமாக இல்லவே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான அறிவு ஏதாவது ஒருவகையில் நமக்குக் கிடைத்தால் போதுமே தவிர பள்ளிக்கூடம் செல்லவேண்டும், கல்லூரிக்குச் செல்ல வேண்டும், படித்துப் பட்டம் பெற வேண்டும். சர்டிபிகேட் எனப்படும் அரசு சான்றிதழ் என்ற அங்கீகரிக்கப் பட்டவைகளை பெற வேண்டும் என்ற அவசியமே இல்லை என்பதைப் புரிந்து கொள்வோமாக!

கல்வித்திட்டத்தில் எதையயல்லாம் முக்கியமாகக் கற்றுக் கொடுக்கவேண்டுமோ இன்றைக்கு அவற்றையயல்லாம் கற்றுக் கொடுப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக டாக்டரேட் பட்டம் பெற்ற ஒருவருக்கு எப்படிச் சாப்பிடவேண்டும் என்பது கூட தெரியவில்லை. ஒழுங்காக சுவாசிக்கத் தெரியவில்லை தண்ணீர் குடிக்கத் தெரிவதில்லை. உடல் உழைப்பைப் பற்றி தெரியவில்லை. நிம்மதியாக தூங்கத் தெரியவில்லை. மனம் எங்கே இருக்கிறது? அதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை. புத்தியை ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியவில்லை. சந்தோசமாக வாழத் தெரியவில்லை, காதல் செய்யத் தெரியவில்லை, ஆரோக்கியமாக இருக்கத் தெரியவில்லை, நிம்மதியாக வாழத் தெரியவில்லை, குடும்ப அமைதியைக் காக்கத் தெரியவில்லை, ஆன்மிகம் தெரிய வில்லை, எனவே இப்பொழுதிருக்கும் கல்வி என்பது மேலே சொன்ன எதையும் நமக்குக் கற்றுக்கொடுப்பதில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நாம் கற்றுக் கொண்டிருக்கும் கல்வி, குறிப்பாக இந்தியாவில் கற்பிக்கப்படும் கல்வி எதற்காக உருவாக்கப்பட்டது எனில் மக்களை மரமண்டைகளாக ஆக்குவதற்கு என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இந்த உலகத்தையே ஆண்டு கொண்டிருப்ப தாக நினைத்துக் கொண்டிருக்கும் பதின்மூன்று குடும்பத்தைச் சேர்ந்த இலுமினாட்டிகள் என்ற இரகசிய குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட போலிக் கல்வித் திட்டத்தினைத்தான் இன்று எல்லா நாடுகளிலும் பயன்படுத்தி வருகிறார்கள். என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதனால் தான் நமக்கு எதுவுமே புரிவதில்லை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இலுமினாட்டிகள் உலக நாடுகளில் உள்ள மக்களுக்கான கல்வித் திட்டத்தினை கடந்த 250 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, குழப்பி, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்களை மறைத்து தவறான விசயங்களை அறிவு என்ற பெயரில் நமது குழந்தைகளுக்கும் நமக்கும் திணித்து நம்மை பொம்மைகளாகவும், நடைபிணங்களாகவும் நடத்தி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலுமே அவரவர்களின் தாய் மொழிக் கல்வி என்பதுதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உதாரணமாக பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தவர்களுக்கு இந்த விசயம் நன்கு தெரியும். பிரெஞ்சு மொழியிலும், ஜெர்மன் மொழியிலும் உள்ள கல்வி சிறப்பாக இருக்கிறது. இதனை ஆங்கில மொழிக் கல்வி முறையாக மாற்றப்படும் பொழுது குழப்பத்திற்கு அழைத்து செல்கிறது.

தாய்மொழியான தமிழ் மொழியில் நமது கல்விமுறைகள் இருக்கும் வரை அனைத்தும் ஒழுங்காகத்தான் இருந்தது. எப்பொழுது ஆங்கிலவழிக் கல்வி உள்ளே நுழைந்ததோ அப்பொழுதே தவறான விசயங்கள் கற்பிக்கப்பட்டு அதை நாம் சரி என்று புரிந்து கொண்டிருக்கிறோம். பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் ஆங்கிலம் நுழைந்தவுடன் குழப்பங்கள் அதிகரித்து தரமான தாய்மொழிக்கல்வி சிதையத் தொடங்கியது. உலகம் முழுவதும் ஆங்கில வழிக் கல்வியாக மாற்றுவதே இந்த பதின்மூன்று குடும்பத்தினரின் (இலுமினாட்டிகள்) திட்டம்.

நமது கல்வித்திட்டம் ஒழுங்காக, சிறப்பாகத்தான் இருந்தது. இலுமினாட்டிகள் தான் அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் பயன்படுத்தி அதனைக் குழப்பி வைத்திருக்கிறார்கள். எனவே நாம் அதிலிருந்து வெளியே வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.நாம் படித்துக் கொண்டிருக்கும் வரலாறு, சத்தியமாக உண்மையான வரலாறு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அனைத்து நாடுகளிலும் இதுபோலவே மாற்றி எழுதப்பட்ட வரலாறுகள் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதே போல அறிவியலை சற்றுத் திரித்து வியாபார நோக்கத்துடன் தான் எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக நோய்கள் அனைத்தையும் கண்டிப்பாக குணப்படுத்த முடியும் என்று நபிகள் நாயகம், ஏசுநாதர், திருவள்ளுவர், திருமூலர், வள்ளலார் மற்றும் பல்வேறு ஞானிகளும், யோகிகளும் தெளிவாகக் கூறியிருக்கும் நிலையில் இப்பொழுதுள்ள அறிவியலின் படி எந்த வியாதிகளையும் குணப்படுத்த முடியாது என்று தவறாக மாற்றி எழுதி வைத்திருக்கிறார்கள்.

நாம் ஒழுங்கான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் ஆயிரம் ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்று கூறிய முன்னோர்களின் இரகசியங்களை மறைத்து நாற்பது வயதுக்கு மேல் நோய்கள் வரும், கண்பார்வை குறைவு வரும் என்று அறிவியலைக் தலைகீழாக திருப்பி எழுதி வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு நாட்டு மொழிகளையும், அறிவியலையும், வரலாற்றையும் ஏன் புவியியலையும் கூட இலுமினாட்டிகளுக்குத் தகுந்தாற்போல் மாற்றிவைத்து நம்மைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஐம்பது அல்லது நூறுவருடங்களுக்கு முன்பு இருந்த அனைத்து நாடுகளிலுள்ள தாய்மொழிக் கல்வியில் நல்ல விசயங்கள் மட்டுமே இருந்திருக்கிறது. அதை சிறிது சிறிதாக மாற்றி அந்தக் கல்வித்திட்டத்தை மொத்தமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் குழந்தைகளை தயவு செய்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு சொன்னவுடன் உங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழும். வேறு எப்படி குழந்தைகளுக்கு உலக விசயங்களை கற்றுக்கொடுப்பது? எவ்வாறு அரசு சான்றிதழ் பெறுவது? எப்படி வேலைக்கு அனுப்புவது? பின்னர் எப்படி சம்பாதிப்பது? என்று பல்வேறு கேள்விகள் வரும். இதற்கான அத்தனை பதில்களையும் இந்தக் கட்டுரை உங்களுக்குத் தெளிவாகக் கூறும் என்று நம்புகிறேன்.

நான் ஏற்கனவே "பீஸ் ஓ மாஸ்டர்' என்ற பெயரில் உலக அரசியல் பற்றிப் பேசியிருக்கிறேன். அதனைக் கேட்டவர்களுக்கு நான் இப்பொழுது சொல்வது தெளிவாகப்புரியும் இல்லையயன்றால் அதை முழுவதும் கேட்ட பின்னர் இக்கட்டுரையைப் படியுங்கள்.

இந்த உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் இஸ்ரேலில் உள்ள பதின்மூன்று குடும்பங்களைச் சேர்ந்த இலுமினாட்டிகள் என்னும் இரகசியக் குடும்பத்தினர் பிடித்து வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கே தெரியாமல் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களால் இதை எப்படி செய்ய முடிகிறது என்றால் இவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு நாம் படிக்கும் கல்வியைப் போன்ற சாதாரணக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதே கிடையாது. அவர்களை பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ அனுப்புவதே கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இலுமினாட்டிகளின் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளும் பிறப்பிலேயே ஐம்பது மொழிகள் அனைத்து அறிவியல், உண்மையான வரலாறுகள் வாழ்க்கை இலட்சியம் இறைபக்தி எல்லாவிதமான தில்லுமுல்லுகள் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொண்டு தான் அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வருகின்றனர்.

இது உண்மையா? இது சாத்தியமா? என்று பலர் கேள்வி எழுப்பலாம். உண்மையிலேயே இது சாத்தியம் தான்.இது எவ்வாறு சாத்தியம் என்று நம்புவதற்கு ஒன்றைக் கூறுகிறேன். ஒரு கணவனும், மனைவியும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பாக, பல விசயங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

1. அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை என்ற பெயரில் ஹீலர் பாஸ்கர் ஆகிய நான் நடத்தும் அனாடமிக் தெரபி நிகழ்ச்சியில் நேரடியாக வந்து கலந்து கொள்ள வேண்டும் அல்லது டிவிடி மூலமாக பார்த்தோ அல்லது புத்தகத்தின் மூலமாகப் படித்தோ அறிந்திருக்க வேண்டும்.

2. மனதின் மணம் என்னும் தலைப்பில் நான் பேசியிருப்பதை முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும்.

3. இரகசியம் (Secret) என்னும் டாக்குமென்ட்ரி படத்தினை பார்த்திருக்கவேண்டும்.

4. ரங்கராட்டின இரகசியம் என்பதைப் பற்றி அறிந்திருக்கவேண்டும்.

5. பீஸ் ஓ மாஸ்டர் (Peace O Master) என்ற பெயரில் உலக அரசியல் பற்றி நான் பேசியவற்றை முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.

6. பெண்களே உங்களுக்காக மற்றும் இறைவழியில் இனிய சுகப்பிரசவம் என்ற தலைப்பில் டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்திருக்கவேண்டும்.

மேலும் நமது அலுவலகத்தினைத் தொடர்பு கொண்டு சென்னையைச் சேர்ந்த திருமதி. ஹேமா, சேலத்தைச் சேர்ந்த திருமதி. சந்திரகலா, செஞ்சியைச் சேர்ந்த பவுனம்மாள் மற்றும் கோவையை சேர்ந்த திருமதி. சாய்தேவி ஆகியோரது தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொண்டு சுகப்பிரசவத்திற்கு உதவி செய்யும் இத்தகைய நல்ல ஆத்மாக்களோடு பெண்கள், குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த தகவல்களை அறிந்து வைத்திருக்கவேண்டும்.

மேலே சொல்லப்பட்ட விசயங்களை எல்லாம் கவனமாகப் புரிந்து கொண்டு அவற்றை செயல்படுத்திய பின்னர் இனிமேல் நான் கூறபோகும் விசயங்களையும் சேர்த்துக் கடை பிடித்தால் நிச்சயமாக குழந்தை பிறக்கும் பொழுதே மிகப்பெரிய அறிவாளியாக உலகில் மிகப்பெரிய மனிதனாக, நிம்மதியாக வாழும் ஒரு குழந்தையை நம்மால் பெற்றெடுக்க முடியும்.

கர்ப்பகாலத்தின் போது ஒரு தாய்மார்கள் எதையயல்லாம் கேட்கிறார்களோ எதையயல்லாம் பார்க்கிறார்களோ எதையயல்லாம் உணர்கிறார்களோ, எதையயல்லாம் நம்புகிறார்களோ அது பிறக்கப்போகும் குழந்தையின் ஆழ்மனதில் பதிந்து அந்தக் குழந்தை அதுவாக மாறிவிடுகிறது.

ஒருவேளை பாழாய்ப் போன நாடகங்களைப் பார்த்து கொண்டிருந்தால் உங்கள் குழந்தை அதுவாகத்தான் வளரும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக எனது அம்மா நான் கர்ப்பத்தில் இருந்த சமயத்தில் நடிகர் மோகன் நடித்த படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறார். மோகன் என்ற தமிழ் திரைப்பட நடிகர் அதிகமான படங்களில் மைக்கைப் பிடித்து பாடிக்கொண்டே இருந்ததாலோ, என்னவோ நான் இப்பொழுது தினமும் ஐந்துமணிநேரம் முதல் எட்டுமணிநேரம் வரை மைக்கைப் பிடித்து பேசிக் கொண்ட இருக்கிறேன்.

கர்ப்ப காலத்தில் தாய் ஒரு விசயத்தைக் கற்றுக்கொண்டால் தான் குழந்தை கற்றுக்கொள்ளும் என்று அர்த்தம் இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் ஒரு தாய் எந்த விசயத்தைக் கேட்கிறாரோ, பார்க்கிறோரோ அதைப் பற்றி அந்தத் தாய்க்குப் புரியாவிட்டாலும் அக்குழந்தை புரிந்து கொள்கிறது என்ற மாபெரும் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக கர்ப்ப காலத்தில் ஒரு அம்மா ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்வதற்காக ஒரு வகுப்பிற்கு செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பெண்மணிக்கோ ஜெர்மன் மொழி சிறிதும் புரியவில்லை. ஆறுமாதகாலம் அந்த மொழியைக் கற்றுக் கொள்வதற்காக தினமும் சென்று வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்குக் குழந்தை பிறந்தவுடன் யாரும் அக்குழந்தைக்கு ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொடுக்காமலேயே அது பேச ஆரம்பித்துவிடும். ஆனால் அந்த அம்மாவிற்கு ஜெர்மன் மொழி தெரியாது. ஏனென்றால் அந்த அம்மா கர்ப்பம் தரித்த நாள் முதல் அது குழந்தையாக வெளியே வரும் நாள்வரை எந்த ஒரு விசயத்தையும் அந்தக் குழந்தைக்கு ஒரே ஒரு முறை சொன்னால் போதும். அதன் மனதில் நன்கு பதிவாகிவிடுகிறது. இதுவே குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை ஒரு விசயத்தைப் பலமுறை சொல்ல வேண்டியது இருக்கும். அப்பொழுது தான் புரியும்.

அதேபோல ஐந்துவயது முதல் பத்துவயது வரை உள்ள காலகட்டத்தில் பலமுறை ஒரு விசயத்தை சொல்லவேண்டி இருக்கும். அதுவே பத்து வயது முதல் பனிரெண்டு வரை உள்ள காலகட்டத்திலோ மேலும் பலமுறை சொல்லவேண்டியது இருக்கும். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விசயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதாவது பனிரெண்டு வயதிற்கு மேல் பலநூறுமுறை சொல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவேதான் நமது முன்னோர்கள் குருகுலக் கல்வி என்ற முறையில் பனிரெண்டு வயதிற்கு முன்னரே ஒரு குருநாதரிடம் கல்வி பயில சேர்த்துவிடுவார்கள். பனிரெண்டு வயதிற்குப் பின்னர் சேர்த்துக் விடுவதனால் அந்தக்குழந்தைகளுக்கு புரிய வைப்பது சிரமம் என்ற காரணத்தினால் இந்த முறையைப் பயன்படுத்தி வந்தார்கள்.

கண்களை மூடிக்கொண்டே படிக்க முடியும், கண்களை மூடி நடக்க முடியும், கண்களை மூடிக்கொண்டே கார் ஓட்ட முடியும் என்றெல்லாம் சொல்லும் பொழுது இவையயல்லாம் ஏதோ சித்து விளையாட்டு என்று நீங்கள் சொல்வீர்கள்.

ஆனால் உண்மை. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பல வருடங்களாக சிலர் இவற்றைக் கற்றுக் கொடுப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இதையயல்லாம் பனிரெண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தை களுக்கு மட்டுமே கற்றுத்தருகிறார்கள். அதிலும் நூற்றில் பத்துப் குழந்தைகள் மட்டுமே இதையயல்லாம் கற்றுக்கொள்கிறது.

இவ்வாறு பல குழந்தைகள் கண்களை மூடி புத்தகம் படிப்பதைப் பார்த்தவர்கள். தன் குழந்தைக்கே இத்தகைய பயிற்சிகளை கொடுத்தவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் இதைப் பற்றி சொல்லும் பொழுதே ஆச்சர்யமாக இருந்தது.

எனது தோழி ஜெயந்தி என்பவர் மலேசியாவில் சாப்பாட்டுக்கடை ஒன்றை நடத்திவருகிறார். மிஸ்டர். ரொட்டிசெனாய் என்று அந்தக் கடைக்குப் பெயர். அந்தத் தோழி தனது பெண் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பயிற்சியை கற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார். அவர்களும் கண்களை மூடிக்கொண்டே புத்தகம் படித்திருக்கிறார்கள். நடந்திருக் கிறார்கள். இதைப்பார்த்து முதலில் ஆச்சர்யப்பட்டு, அதிசயப்பட்டு, பெருமைப்பட்டு மகிழச்சியடைந்தனர் அவரும் அவரது குடும்பதாரும்.

ஆனால் நாளடைவில் ஒரு கவலை அவர்களை சூழ்ந்துகொண்டது அதாவது கண்களை மூடிக்கொண்டாலே வெளியில் இருப்பவை அனைத்தும் தெரியும் என்பதால் இந்தப் பெண் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அனைத்தும் தெரிந்துவிடக் கூடிய இந்த விசே­ சக்தியினால் சரியான வாழ்க்கை வாழ முடியாதோ என்று எண்ணி பயப்பட்டு அவர்கள் இந்தப் பயிற்சியினைக் கற்றுக் கொள்வதை அத்துடன் நிறுத்தி இருந்தனர். இப்பொழுது அவர்கள் பயம் நீங்கி தெளிவு அடைந்து அந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்தப் பயிற்சியினை இப்பொழுது பல்வேறு நாடுகளிலும் பல்வேறு ஊர்களிலும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நமது சித்தர்கள், நமது முன்னோர்கள், நமது தாத்தா, பாட்டிகள் இந்த விசயத்தை சொல்லும் பொழுது அனைவரும் கேட்டு சிரித்தார்கள். ஆனால் இதே விசயத்தை ஏ.சி. அறையில் பல இலட்சம் ரூபாய் கட்டணமாக வாங்கிக்கொண்டு சொல்லிக் கொடுக்கும் பொழுது அதே விசயம் இப்பொழுது வியப்புடன் பார்க்கப்படுகிறது. இந்த விசயத்தினை நாம் ஏன் இந்த சமயத்தில் கூறுகிறோம் என்றால் பனிரெண்டு வயதிற்குள் ஒரு குழந்தைக்கான கல்வியை பயிற்றுவித்து விடவேண்டும். அப்பொழுது தான் அந்தக் கல்வி பயனுள்ளதாக அக்குழந்தைக்கு அமையும். அதற்குப் பின்னர் எதைக் கற்றுக் கொடுத்தாலும் அக்குழந்தையால் ஒழுங்காகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை நாம் புரிந்து கொள்வோமாக!

எனவே பனிரெண்டு வயதிற்குள் கணிதம், அறிவியல், வரலாறு வாழ்க்கையின் இலட்சியம், மன நிம்மதி,ஆரோக்கியம், சந்தோசம், குடும்ப நலம் போன்ற அனைத்து விசயங்களையும் கற்றுக் கொடுத்துவிட வேண்டும். ஆகவே கர்ப்ப காலத்திலிருந்தே பெண்கள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுங்கள். உங்களுக்குப் புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி, அந்தக் குழந்தைக்காக நீங்கள் செல்லவேண்டும். இது மட்டுமல்லாமல் பாட்டு, நடனம். வாஸ்த்து, யோகா. ஜோதிடம், ஆரோக்கியம், ஆன்மீகம், அலங்காரப் பொருள் தயாரிப்பு என்று பல்வேறுவிதமான நல்ல பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தில் இவ்வாறான பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுவரும் பொழுது பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக, அறிவுள்ளதாக திறமையாக இருப்பதற்கு நீங்கள் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கணவன், மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவது டிவி நாடகங்களைப் பார்ப்பது, டிவியில் கெட்ட விசயங்களைப் பார்ப்பது, தினசரி, பத்திரிக்கை புத்தகங்களில் ஒழுங்கற்ற கெட்ட விசயங்களை படிப்பது என இவற்றையயல்லாம் பெண்கள் கர்ப்ப காலங்களில் சந்திப்பதால் தான் இப்பொழுதுள்ள குழந்தைகள் இதன் பாதிப்பால் ஒழுங்கானவர்களாக இல்லை. எனவே கர்ப்ப காலத்தில் உள்ள ஒரு அம்மாவின் மனம் பத்து மாதங்களில் காது, மூக்கு என இவற்றால் இதில் எதையயல்லாம் கேட்கிறார்களோ எதையயல்லாம் பார்க்கிறார்களோ, எவற்றையயல்லாம் கற்றுக்கொள்கிறார்களோ அவற்றின் பாதிப்பில் தான் குழந்தை வெளிவரும். குழந்தை பிறந்த பின்னர் எந்த நகரத்தில் எந்த பெரிய பள்ளியில் சேர்க்கலாம்? அதற்கு பணம் சம்பாதிக்கவேண்டுமே என்று யோசிப்பதை விட்டுவிட்டு கர்ப்பகாலத்திலேயே கல்வியை கற்பித்து முடித்துவிடலாம்.

இதற்கென பல பாடத் திட்டங்களையும், பல்வேறு வழிமுறைகளையும் நாம் ஆய்வுசெய்து வருகிறோம். விரைவில் அது உங்கள் பயன்பாட்டிற்கு வரும். அதற்கு சில வருடங்கள் ஆகும். ஏனென்றால் உடனே செய்வதற்கு அது ஒன்றும் நூடுல்ஸ் கிடையாது. எனவே இப்போதைக்கு அதாவது கர்ப்ப காலத்திலிருந்து குழந்தை பெற்றுகொள்ளும் காலம் வரை உங்களுக்கு எவை எவை நல்ல விசயங்கள் என்று தோன்றுகிறதோ எவையயல்லாம் உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது சம்பந்தப்பட்ட வீடியோக்கள், புத்தகங்கள், வல்லுனர்களின் பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை தேடிச் செல்லுங்கள்.

விரைவில் நாமே இவற்றை யயல்லாம் ஒன்று சேர்த்து கொடுத்து நல்ல விசயங்களை உங்களுக்கு வழங்க பல ஏற்பாடுகள் செய்ய இருக்கிறோம். அப்பொழுது உங்களுக்குத் தேவையான ஆடியோ, வீடியோ, புத்தகங்கள், ஹார்டுடிஸ்க், பாடத்திட்டங்கள் ஆகியன விரைவில் உங்களுக்குக் கிடைக்க இருக்கிறது.

இது சாத்தியமாக வேண்டு மென்றால் நாம் இப்பொழுது சொல்லும் வழிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்கவேண்டும்.

குழந்தைகள் வாய் பேச ஆரம்பித்த நாள் முதல் பனிரெண்டு வயதிற்குள் இலட்சக்கணக்கான கேள்விகளைக் கேட்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு சரியான பதிலை மட்டும் கொடுத்து வந்தோம் என்றால் உலகில் உள்ள அனைத்து விசயங்களிலும் கை தேர்ந்த ஒரு ஞானியாக, புத்திசாலியாக பனிரெண்டு வயதிற்குள் அந்தக் குழந்தை உருவாகிறது. ஆனால் பெற்றோர்களும், மற்றவர்களும் குழந்தை தானே என்று நினைத்து கேட்கும் கேள்விகளுக்கு தவறான பதில்களையும், கேலிப் பேச்சுகளை மட்டும் தான் அந்தக் குழந்தையின் காதில் பதிலாகக் கூறுவதால் அதைக் கேட்டு வளரும் குழந்தை பெற்றவர்களையும், மற்றவர்களையும் மதிப்பது இல்லை.

உதாரணமாக ஒரு குழந்தை வானத்தைப் பார்த்து நிலாவைப் பார்த்து அது என்ன என்று கேட்கும் பொழுது பெற்றோர்கள் தமாசாக அது பாட்டி சுட்ட அப்பளம் என்று கூறும்பொழுது குழந்தை முதலில் அதை நம்பிவிடுகிறது. அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளிடமோ வேறு பெரிய மனிதர்களிடமோ இதைப்பற்றி கூறும் பொழுது அவர்கள் நகைச்சுவையாக சிரித்துவிட்டு "நீ கூறுவது தவறு' என்று கூறும்பொழுது அவமானமாகி விடுகிறது. அதன் பிறகு பெற்றோர்கள் எப்பொழுதுமே சரியான பதிலைத் தரமாட்டார்கள் என்று ஒரு முடிவிற்கு அந்தக் குழந்தை வருகிறது.

எனவே இனிமேல் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் தெரியும் என்று கூறுங்கள். தெரியாது என்றால் தெரியாது என்று கூறுங்கள். உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்த விசயத்தை மட்டுமே கூறுங்கள். ஒருவேளை தெளிவாக தெரியவில்லை என்றால் எனக்குத் தெரியவில்லை என்று ஒப்புகொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு பதில் கூறும் பொழுதும், பதில் கூறி முடித்த பின்னரும் எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான் இன்னும் நிறைய விசயங்கள் இருக்கின்றன.விரைவில் அவற்றையயல்லாம் நீ கற்றுக்கொள் என்று கூறி குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.

இந்த நேரத்தில் ஒரு விசயத்தினை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இண்டர்நெட், கூகுள், விக்கிப்பீடியா, செய்திதாள்கள் என எல்லாவற்றிலும் வெளியாகும் விசயங்கள் முற்றிலுமாக உண்மையில்லை என்று நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் இதைப் புரியவையுங்கள். இதை மட்டும் ஒரு குழந்தை நன்றாகப் புரிந்து கொள்ளுமானால் சரியான அறிவை அது தேடிப் பெற்றுக் கொள்ளும்.

குழந்தைகளுக்கு சரியான ஞானத்தைக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. எனவே இனிமேல் குழந்தைகளைக் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லை. அந்தக் குழந்தைகளின் அறிவை விரிவுப்படுத்த அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறி வளர்த்து வரும்பொழுது ஞானம் பிறக்கிறது.

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றும் ""சரி நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் பெற்றோர்களுக்கு இதற்கென நேரம் இல்லை என்ன செய்வது?"

"பெற்றோர்களான எங்களுக்கே இன்னும் பல விசயங்கள் புரியவில்லை. நாங்கள் எப்படிக் குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது"

"இதைவிட ஒரு ஆசிரியருக்குத் தெரிந்த விசயங்கள் அனைத்தையும் நாங்கள் எப்படித் தெரிந்து கொண்டு கற்றுக்கொடுப்பது?"

நீங்கள் கேட்பது சரிதான். புரிந்துவிட்டது.

எங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க நேரமும் இல்லை. மேலும் எல்லா விசயங்களும் தெரிந்தவர்களும் இல்லை. எனவே நாங்கள் என்ன செய்வது? என்ற கேள்வி எழும்.

இதற்கு தீர்வு காண்பதற்காகத் தான் நான் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறேன். அதற்குப்பெயர் பானு வீட்டுக் கல்விமுறை. அந்த அமைப்பின் மூலமாக விரைவில் ஒரு பாடத் திட்டத்தை உருவாக்க இருக்கிறேன்.

குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு தேவையான அறிவியல், வரலாறு, கணிதம் மற்றும் பல்வேறு விதமான கலைகளை (வல்லுனர்) உள்ளடக்கிய பாடத் திட்டத்தினை வடிவமைப்பதற்காக நான் ஒரு வல்லுனர் குழுவை ஏற்பாடு செய்திருக்கிறேன்.

அந்த வல்லுநர் குழுவால் உருவாக்கப்படும் பாடத்திட்டத்தினை விரைவில் பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுக்க இருக்கிறோம். அதாவது ஒரு குழந்தை இந்த உலகில் வாழ்வதற்குத் தேவையான எல்லாவிதமான அறிவினையும் ஒன்றாக சேர்த்துத் தொகுத்துக் கொடுக்க இருக்கிறோம். அதில் ஐம்பது மொழிகள் அனைத்து மதங்களிலும் உள்ள உண்மையான நினைவுகள், அனைத்து வகை கணிதம் எல்லாவிதமான அறிவியல், வரலாறு, புவியியல், சமையல், பாட்டு, நடனம், பொறியியல் என அனைத்துவிதமான கலைகளும் இதில் அடக்கம், இத்தகைய பாடத் திட்டத்தினை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். என்பதை இக்கட்டுரையின் மூலம் தெரியப்படுத்துகிறோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு என்ன தெரியுமோ, அதை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் வளர்க்கும் குழந்தைக்கு நீங்கள் கற்றுக்கொடுப்பதே போதும். உதாரணத்திற்கு ஒன்று கூறுகிறேன். இப்போது வளரும் குழந்தைகள் இந்த கல்வி முறையில் நிறையக் கற்றுக்கொண்டு வளரும் பிள்ளைகள் பண்பாட்டோடு, அமைதியாக, நிம்மதியாக வாழ்கிறார்களா என்று யோசித்துப் பாருங்கள். படித்த நமது பிள்ளைகள் பல்வேறு விதமான கலாச்சார சீரழிவுகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இதற்குப் படிக்காமலேயே வீட்டில் பேசாமல் சும்மா இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே இப்போதைக்கு உங்களுக்கு என்ன தெரியுமோ அதை உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள். விரைவில் நாம் நமது பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதன் பிறகு அந்தப் பாடத்திட்டத்தை சொல்லிக் கொடுத்தால் போதும்.

இப்பொழுது உங்கள் குழந்தையை வளர்ப்பது யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

நிச்சயமாக இப்பொழுதுள்ள குழந்தைகள் யாரும் உங்கள் குழந்தைகள் கிடையாது. இவர்களெல்லாம் கார்ட்டூன்களால் வளர்க்கப்படும் குழந்தைகள்.டிஸ்னியின் குடும்பத்தினரால் வளர்க்கப்படும். கேம்களால் வளர்க்கப்படும் குழந்தைகள். டிவி வளர்க்கும் குழந்தைகள் செல்போன், இண்டர்நெட், கூகுள், விக்கிப்பீடியா ஆகியன வளர்க்கும் குழந்தைகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இப்பொழுது உள்ள நிலையில் எந்தக் குழந்தையும் பெற்றோர் சொல்பேச்சுக் கேட்பதில்லை. ஏனென்றால் அனைத்து குழந்தைகளும் அறிவு என்ற பெயரில் குடும்பத்திலிருந்து விலகி இருப்பதே காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு மட்டும் சரியான பதிலைக் கொடுக்கும் பட்சத்தில் பள்ளிக்கு அனுப்பாமலேயே ஒரு குழந்தையை புத்திசாலி ஆக்க முடியும். அதற்கு நமக்கு என்ன வேண்டும்?

1. குறைந்தது நான்கு அல்லது ஐந்து மொழிகள், 2. கணிதம், 3. அறிவியல், 4. வரலாறு, 5. புவியியல், 6. ஓவியம்,7. நடனம், 8.இசை, 9. நீச்சல் போன்ற எல்லாவிதமான கலைகளையும் பனிரெண்டு வயதிற்குள் சரியாக முழுமையாக கற்றுக் கொடுத்து அவர்களை புத்திசாலியாக்கிவிடலாம். நம்புங்கள் எனவே நாம் இதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.

2. தமிழ்நாட்டில் நிறையப்பேர் ஹோம் எஜுகே­ன் என்ற பெயரில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமலேயே வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். பல நாடுகளிலும் இந்த முறை இப்பொழுது பிரபலமாகி வருகிறது. உடனே உங்களுக்கு ஒரு கேள்வி வரும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை யயன்றால் அரசு சான்றிதழ், வேலை, சம்பளம் அரசு கொடுக்கும் மானியம், சலுகைகள், ஸ்காலர்சிப் போன்றவை வாங்க நாம் என்னசெய்வது என்று உங்களுக்குத் தோன்றும்.

நாம் உருவாக்கும் அறிவாளிகளான அந்தக் குழந்தைக்கு உலகத்தில் யாரும் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. அந்தக் குழந்தைகள் மற்றவர்களிடம் வேலை செய்து சம்பாதிக்கும் சாதாரண குழந்தைகள் அல்ல. அந்தக் குழந்தைகள் வளர்ந்து நாளை உலகையே ஆளப்போகின்றன. நமது குழந்தைகள் சம்பளம் வாங்கும் குழந்தைகள் அல்ல, சம்பளம் கொடுக்கும் குழந்தைகள்.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒருவேலை, ஒரு வருமானம், ஒரு வீடு, ஒரு கார் அல்லது டூவிலர், கிரெடிட் கார்டு போன்றவற்றைக் கொடுத்துவிட்டு அதற்காக வாழ்நாள் முழுவதும் அடிமைகளாக வேலை செய்து கொண்டு இன்பம், சந்தோசம், நிம்மதி என்றால் என்னவென்றே தெரியாமல் அவஸ்த்தையுடன் வாழவேண்டும் என்றுதான் இலுமினாட்டிகள் என்னும் இந்த 13 குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளார்கள்.

இதிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் நாம் விபரீத துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம்.

பின்லாந்தில் உலகிலேயே மிகச் சிறந்த கல்வி முறையை அமல்படுத்தி வருகிறார்கள். அந்த முறையை உலகம் முழுவதும் கொண்டுவரவேண்டும்.

பின்லாந்து கல்விமுறை

சிறந்த கல்வியை நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். என்றால் கண்டிப்பாக பின்லாந்து நாட்டில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மிகச்சிறிய நாடான பின்லாந்து பல வருடங்களாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டு வந்தது. வறுமையிலும், பஞ்சத்திலும் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தார்கள். பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் பின்லாந்து நாட்டைப் பிடித்து அதன் வளங்களைச் சுரண்டிச் கொள்ளையடித்ததுடன் அந்நாட்டு மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு 1963ல் பின்லாந்து நாட்டில் உள்ள நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பின்லாந்து நாட்டை முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்றால் அதற்குக் கல்வியை ஒழுங்குப்படுத்தினால் தான் முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். அன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட்ட பாடங்கள் சிறப்பானதாக இல்லை. எனவே பல்வேறு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும், தனியார் சுயநிதிக் கல்லூரிகளும், தனியார் பள்ளிகளும் ஆரம்பிக்கப் பட்டன. ஆனால் அவையயல்லாம் மிகவும் வசதியான நிலையில் இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கூடிய நிலையில் இருந்தது. ஏனென்றால் அங்கெல்லாம் அவர்கள் கேட்கும் கல்விக்கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே பல்வேறு நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், புத்திசாலிகளையும் பயன்படுத்தி ஐந்துவருட கடினமான உழைப்புக்குப் பின்னர் 1968ஆம் ஆண்டு ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்கினார்கள். அந்தக் கல்வி முறையில் படிக்கும் எந்த ஒரு குழந்தையும் ஆரோக்கியமாக, அமைதியாக, நிம்மதியாக, சந்தோசமாக வளத்துடன் குடும்ப நிம்மதியுடன் ஒரு தலைசிறந்த மனிதனாக வாழ்வதற்கு உரிய அனைத்து பாடத்திட்டங்களையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த வழி முறையாக அது அமைக்கப்பட்டிருந்தது.

1973ஆம்ஆண்டு ஆசிரியர்களுக்கு என சில திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதாவது கல்வியின் பாடத்திட்டங்களை சரிசெய்வதை விட நல்ல ஆசிரியர்கள் மூலமாகத்தான் நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே ஏற்கனவே 1968ஆம் ஆண்டு பாடத் திட்டங்களை உருவாக்கியிருந்தாலும் ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்தத் தெரியாததால் குழந்தைகளுக்கு அது சரியாகச் சென்று சேரவில்லை என்பதைக் கண்டறிந்தனர். எனவே 1973ஆம் ஆண்டு ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்ற வரையறையை நிர்ணயம் செய்தனர். அவ்வாறு பின்லாந்தில் உள்ள அனைத்து ஆசிரியர் களும் அனைத்து விசயங்களையும் சிறப்பாகத் தெரிந்தவர்களாக மட்டுமே இருக்குமாறு ஆசிரியர்கள் உருவாக்கப் பட்டார்கள்.

பல நாடுகளில் மருத்துவர்கள், இன்ஜினியர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் பின்லாந்தில் மட்டும் தான் முதன் முதலில் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. இப்பொழுதும் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

1990ஆம் ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சமயத்தில் பின்லாந்து நாட்டில் ஆயிரம் பேரில் ஐந்து பேருக்கு மட்டுமே வேலை கொடுக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது கூட ஆசிரியர்களின் சம்பளத்தை குறைக்கவில்லை. ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் குறைக்கவில்லை என்பது மிகவும் பாராட்டத்தக்க ஒரு நிகழ்வு. பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் உலகில் கல்வித்தரத்தில் பதினைந்தாம் இடத்தில் இருந்த பின்லாந்து அதன் பின்னர் நேரடியாக முதலிடத்திற்கு வந்துவிட்டது. பின்லாந்தில் தினசரி எழுபத்தைந்து நிமிடங்களுக்கு படிப்பு எதையும் கற்றுக் கொடுக்காமல் குழந்தைகளை சும்மா இருக்கச் சொல்கிறார்கள். ஒரு குழந்தை சும்மா இருக்கும் பொழுது மட்டும் தான் நான் யார் அது என்ன? இது என்ன? என்று யோசித்து சுய அறிவை வளர்த்துக் கொள்ளும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் பதினைந்து வயது வரை எந்த ஒரு குழந்தைக்கும் எந்த ஒரு பட்டமும் அவர்கள் சூட்டுவதில்லை அதாவது இந்தக் குழந்தை கோபக்காரக்குழந்தை. இந்தக் குழந்தை "மக்கு', இந்த குழந்தை புத்திச்சாலி என்று குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்தப் பட்டத்தையும் ஆசிரியர்கள் அவர்களுக்கு சூட்டுவதில்லை. ஏனென்றால் அந்தப் பட்டம் தற்காலிகமானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த திட்டத்திற்குப் பெயர் PISA (Programme Internaional School Assessment) புரோகிராம்ஃபார் இன்டர்நே­னல் ஸ்கூல் அசஸ்மென்ட் என்பது இதன் விரிவாக்கம். இந்தியா உலகநாடுகளில் கல்வியின் தரத்தில் 72ம் இடத்தில் இருக்கிறது. 74 நாடுகளில் நாம் 72ம் இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். பின்லாந்து கல்வி முறையில் போட்டியும், பொறாமையும் கிடையாது. ஏனென்றால் குழந்தைகளுக்குப் பரிட்சையுமில்லை. மதிப்பெண்களும் இல்லை. குழந்தைகளுக்குள் முதலாவது இரண்டாவது என்ற பேதமும் இல்லை. எனவே சிறுவயது முதலே போட்டி பொறாமையில்லாமல் குழந்தைகள் வளர்கின்றன. இந்தப் பள்ளிகளில் ரேங்க்கிங் எனப்படும் முதலாவது இரண்டாவது என்பதையே தேவையில்லாதது என அனைவரும் நம்புகிறார்கள்.

பின்லாந்தில் கல்வியை நான்கு விதமாகப் பிரித்திருக்கிறார்கள்.

1. பிரைமரி (ஏழு வயது முதல் பதினாறு வயது வரை) குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்பு உண்டு. ஆனால் எந்த ஒரு தேர்வும் கிடையாது. கல்வி கட்டணமும் கிடையாது.

2. ஹைஸ்கூல் (பதினாறு வயது முதல் பத்தொன்பது வயது வரை) பரீட்சை இருக்கிறது. பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் கல்விக்கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும். பரீட்சை என்பது மதிப்பெண்கள் போட்டு முதலாவது, இரண்டாவது என்று பிரிப்பதற்காக அல்ல. குழந்தைகள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருக் கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காக என்பது மட்டுமே தானே தவிர அதில் மார்க்குகள் போட்டு குழந்தைகளுக்கு காண்பிப்பதற்காக அல்ல என்பதே மிக முக்கியமான விசயம் 16வயது முதல் 19வயது வரையான கல்வியை வீட்டிலிருந்தும் படிக்கலாம் அல்லது பள்ளிக்குச் சென்றும் படிக்கலாம்.

3. காலேஜ் (College) இதனை இரண்டாகப் பிரித்து யுனிவர்சிட்டி என்றும் பாலிடெக்னிக் என்றும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

4. டாக்டரேட் டிகிரி (Doctrate Degree) இதை நமது பாஷையில் கூறுவது என்றால் பி.எச்.டி எனலாம்.

எனவே பின்லாந்து கல்வி முறையை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக தரம் வாய்ந்த குழந்தைகளாக, அறிவாளியாக, புத்திசாலியாக, இந்தச் சமுதாயத்திற்கு நல்ல காரியம் செய்யக்கூடிய குழந்தைகளாக உருவாவார்கள் என்று நாம் நம்புகிறோம், எனவே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நாம் இனிமேல் இந்தத் திட்டத்தினை செயல் படுத்துவதற்கு ஒவ்வொருவரும் அதற்கான முயற்சியை எடுப்போமாக!

எனவே நாம் விரைவில் அங்கு சென்று பின்லாந்து கல்விமுறையை கற்றுக் கொள்ள இருக்கிறோம். முடிந்தால் நீங்களும் நேரடியாக பின்லாந்து சென்று கற்று வாருங்கள். இது சம்பந்தப்பட்ட பயிற்சிகள் அந்த நாட்டில் நடந்து வருகிறது.

மலேசியா நாட்டில் செரம்பான் என்ற ஊரில் சகோதரி பானு என்பவரை சில வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்தேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களுக்கு வீட்டிலேயே எப்படிக் கல்வி கற்றுக் கொடுப்பது என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணமாக இருந்து வருகிறார். இவர் பல வருடங்களாக டியூசன் சென்டர்களை நடத்திவருகிறார். அதன் மூலமாக நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர் தனது குழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் கல்வி என்பது இன்றைக்குத் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதனால் பள்ளிக்கு அனுப்புவதாலோ, டியூசனுக்கு அனுப்புவதாலோ ஒரு குழந்தையின் வாழ்க்கைக்கு தேவையான எந்த ஒரு விசயத்தையும் சரியாகக் கிடைக்கச் செய்துவிட முடியாது என்பதனை உணர்ந்த இவர் வீட்டிலேயே குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுக்க முடியும் என்பதைப் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கண்டறிந்து இப்பொழுது அதைப் பயன்படுத்தி வாழ்ந்து வருகிறார்.

பல்வேறு கிளைகளுடன் இயங்கிக் கொண்டிருந்த அவரது டியூசன் சென்டர்களைக் சுருக்கி இப்பொழுது சில கிளைகளை மட்டுமே நடத்திக் கொண்டு வருகிறார். ஏனென்றால் டியூசன் என்ற பெயரில் குழந்தைகளுக்குத் தேவையில்லாத விசயத்தைக் கற்றுக்கொடுப்பது தனக்குப் பிடிக்கவில்லையயன்று கூறுகிறார். மேலும் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் இவர் தனது சொந்த மகனை பள்ளிக்குச் சென்று வருவதை நிறுத்திவிட்டு அவருக்கு வீட்டிலேயே சில வருடங்களாக பாடங்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வருகிறார். நான் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த சமயத்தில் அந்தக் குழந்தை என்னிடம் பேசிய முறையும், பழகிய முறையும், கேட்கும் கேள்கவிகளுக்கும், அந்தக் குழந்தை நடந்து கொள்ளும் முறைகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. சிறுகுழந்தையாக இருந்தாலும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், அதே சமயத்தில் அன்புடனும், தெளிவுடனும் பேசுவதை அன்று தான் நான் முதன் முதலில் பார்த்தேன்.

அந்தக் குழந்தை கேட்கும் பல கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த மாதிரி கேள்வி கேட்பதற்கே ஒரு அறிவு வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது. சகோதரி செரம்பான் பானு அவர்கள் சில விசயங்களை என்னிடம் கூறினார். அவற்றைத் தொகுத்து நான் இப்பொழுது உங்களுக்கு கூறிகிறேன்.

1. ரமணர், ஆதிசங்கரர், தாமஸ் ஆல்வா எடிசன் இவர்களில் யாருமே பள்ளிக்குச் செல்லவில்லை.

2. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் புத்திசாலித்தனமாகப் பல கேள்விகளை கேட்கும் பொழுது அந்தக் குழந்தைகளை நோயாளிகள் என்று பெயர் சுமத்துகிறீர்கள் இது நியாயமா? உதாரணமாக குழந்தைகள் கேள்வி கேட்கும் பொழுது அந்தக் குழந்தைக்கு ஏடி, எச்.டி., அதிகப்பிரசங்கி ஹைப்பர் ஆக்டிவிட்டி என்றெல்லாம் பட்டம் கட்டி அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து அவர்களை மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறீர்களே இது நியாயமா?

3. ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு விசயத்தில் தனித்துவமான ஆற்றல் பெற்றிருக்கும். அதைத் கண்டுபிடித்து அதற்கு ஏற்றாற்போல் பாடம் நடத்தாமல் தேவையில்லாத விசயங்களைக் கற்றுக்கொடுத்து அதை அந்தக் குழந்தை கவனிக்காமல் இருக்கும் பொழுது அதை முட்டாள் என்று கூறுகிறீர்களே இது நியாயமா?

4. சமுதாயமும், ஆசிரியர்களும், கல்வித்துறையும் ஒன்று சேர்ந்து ஒரு குழந்தை எப்படிப்பட்ட குழந்தை என்று முத்திரை குத்துகிறீர்களே முதலில் நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக வகுப்பில் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் சண்டைக்காரன் ஒரு குழந்தை கோபப்பட்டால் கோபக்காரன் என்று முத்திரை குத்தி மாணவர்களின் உணர்ச்சிகளைப் பொறுத்து பழக்க வழக்கங்களை பொறுத்து அவர் இப்படிப்பட்டவர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறீர்களே இது நியாயமா?

5. மக்கள் இப்பொழுது படித்துப் பட்டம் வாங்குவது என்பது உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், ஒரு அங்கீகாரத்திற்காகவும், ஒரு பந்தாவிற்காகவும், கல்யாணப் பத்திரிக்கையில் பெயருக்குப் பின்னால் போட்டுப் கொள்வதற்காகவும் தான் இருக்கிறது. இது நமக்குத் தேவையா?

6. ஒரு குழந்தையின் தற்காலிகமான குணங்களை வைத்து அந்தக் குழந்தைகளுக்குப் பட்டங்களைக் கொடுப்பதை ஆசிரியர்கள் தயவு செய்து உடனே நிறுத்தவேண்டும்.

7. ஒரு சில நாடுகளில் உள்ள சில பள்ளிகளில் ஒரு குழந்தையின் நடவடிக்கையை வைத்து சிடுமூஞ்சி கோபக்காரன், முட்டாள் என்று அவர்களின் அடையாள அட்டையில் (ஐடி கார்டு) கம்ப்யூட்டரின் உதவியுடன் பதிவு செய்கிறார்கள். அவரின் குணங்களை வைத்து சில பட்டங்களை அதில் பதிவு எண்ணுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதால் கம்ப்யூட்டரில் அடித்தவுடன் அக்குழந்தை ஹைப்பர் ஆக்டிவிட்டி என்று முதலிலேயே தெரிந்துவிடுகிறது. எனவே பல கல்லூரிகளில், பல பள்ளிகளில் அவர்களை சேர்த்துக் கொள்ள அச்சப்படுகிறார்கள். எனவே தயவு செய்து தற்காலிமான குணநலன்களை வைத்து ஒரு குழந்தையின் எதிர்காலத்தைப் பாழாக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

8. ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நேரத்திலும் பல்வேறு விதமான உணர்ச்சிகளில் பாதிக்கப்படுகிறான். உதாரணத்திற்கு நீங்களாகட்டும், நானாகட்டும் சில நேரங்களில் கோபமாக இருப்போம். சில விசயங்களில் நாம் முட்டாளாக இருப்போம். சில விசயங்களில் "மக்காக' இருப்போம். சில விசயங்களில் நாம் புத்திசாலியாக இருப்போம். உங்களை யாராவது இப்படிப்பட்ட முத்திரைகளை குத்தி அதைக் கம்ப்யூட்டரில் நமது புகைப்படத்துடன் பதிவு செய்துவிட்டு முதன் முதலில் பார்த்தவுடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட ஆதாரத்துடன் நம்மைப் பற்றிய ஜாதகத்தை கூறினால் உங்களுக்கு மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று யோசியுங்கள்.

9. குழந்தைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தைக் கொடுங்கள். ஆனால் எல்லைக் கோட்டை நிர்ணயுங்கள். கட்டுப்பாட்டை விதிக்கும் பொழுது குழந்தைக் கட்டுப்பாட்டை மீற நினைக்கத் துடிக்கிறது. ஆனால் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு ஒரு கோடுபோட்டு வைத்துவிட்டால் இந்தக் கோட்டை மீறிச் செல்லும் பொழுது வரும் விபரீதத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு எனறு அந்தக் குழந்தைகளுக்கும் புரிய வைத்தால் அதாவது எல்லைக் கோட்டை தாண்டும் பொழுது ஏற்படும் விபரீதத்தினைப் புரியவைப்பதன் மூலமாக ஒரு குழந்தையாக கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக ஒழுங்காக வாழவைக்க முடியும்.

10. "நான் பட்ட கஷ்டம் என் குழந்தைகள் படக் கூடாது' என்று எல்லாப் பெற்றோர்களும் நினைக்கிறார்கள். தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றிவிடுங்கள். நீங்கள் கஷ்டப்பட்ட காரணத்தினால் தான் அது உங்களுக்கு அனுபவமாக மாறி இருக்கிறது. உங்கள் குழந்தைகளும் கஷ்டப்பட்டால் மட்டுமே அவர்கள் நன்றாக இருப்பார்கள். இவ்வாறு சிறுவயது முதலே கஷ்டம் என்றால் என்ன? பசி என்றால் என்ன? வறுமை என்றால் என்ன? என்பதெல்லாம் தெரியாமலேயே குழந்தைகளை வளர்த்து வருவதால் திடீரென இந்தப் பாதிப்புகள் அந்தக் குழந்தைக்கு வரும் பொழுது அதனால் தாங்க முடிவதில்லை. அது இந்த உலகில் வாழ்வதற்கான தகுதியை இழந்து விடுகிறது. எனவே குழந்தைகள் கஷ்டப்படும் பொழுது அதற்கு அனுபவம் ஏற்படுகிறது என்று நம்பிக்கையுடன் காத்திருங்கள் வருத்தப்படாதீர்கள்.

11. குழந்தைகளை இயந்திர மனிதர்களாகப் பார்க்காதீர்கள். இரத்தமும், சதையுமாக, உணர்ச்சியுள்ள ஒரு மனிதனாகப் பாருங்கள். பல பெற்றோர்களும், பல ஆசிரியர்களும் அவர்களைத் தங்கள் சொல் பேச்சுக் கேட்கும் இயந்திர மனிதர்களாக அதாவது ரோபோட்களாக இருந்தால் மட்டும் தான் அவர்களை நல்ல குழந்தைகள் என்று கூறுகிறார்கள். தயவு செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். கடைக்குச் சென்று ஒரு ரோபோட்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

12. உங்களது அனுபவத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அனுபவித்தால் மட்டுமே அனுபவங்கள் கிடைக்கும். ஒருவருக்கு உங்கள் அனுபவத்தைச் சொல்வதால் அறிவுரை மட்டுமே கிடைக்கும். அனுபவங்கள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினை குழந்தைகளிடம் திணித்து உங்களைப்போன்ற ஒரு மனிதனாக வாழ வழி செய்து விடாதீர்கள். அந்தக் குழந்தைக்கு ஏற்படும் அனுபவத்தினை வைத்து அது ஒரு புதிய பரிமாணத்தில் புதிய வாழ்க்கை வாழ்வதற்கு அதற்கு உதவி செய்யுங்கள்.

13. தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (டெய்லி சர்க்கிள் டைம்) உருவாக்கி குழந்தையிடம் அமர்ந்து அமைதியாக, பொறுமையாக பின்வருமாறு யோசிக்கச் சொல்லுங்கள். இன்றைய தினத்தில் காலையிலிருந்து இரவு வரை நீ செய்த விசயங்களைப் பற்றி நீயே யோசித்து இன்று முதல் எது நல்லது? எது கெட்டது? என்று ஒரு முடிவினைச் செய் என்று கூறுங்கள். இதற்கென குழந்தைகளுக்கு அரைமணிநேரம் அல்லது ஒருமணிநேரம் அவகாசம் கொடுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து உங்கள் அனுபவத்தினைப் பேசிக் குழந்தைகளைக் குழப்பாதீர்கள். ஒரு குழந்தை சொந்தமாக யோசிக்கும் பொழுது நிச்சயமாக நல்ல விசயங்களை மட்டும் தான் யோசிக்கும் என்று நம்புங்கள்.

14. எது சரி? எது தவறு? என்பதைத் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்காதீர்கள். எது சரி எது தவறு என்பதைக் குழந்தைகளே சொந்தமாக யோசிக்கும் பொழுது மட்டும் தான் அவர்களுக்குச் சிறப்பாக புரியுமே தவிர நீங்கள் சொல்வதால் அவர்களுக்குப் புரியபோவதில்லை. உதாரணமாக விளக்கில் கை வைத்தால் சுடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் குழந்தைகளுக்குத் தெரியாது. ஒரு குழந்தை எப்பொழுது விளக்கில் கை வைத்து சூடுபட்டு கையை வெடுக்கென்று எடுக்கிறதோ அதன்பிறகு தான் அது விளக்கில் கை வைப்பதை நிறுத்துமே தவிர நாம் சொல்லும் பொழுது கண்டிப்பாக அதற்குப் புரியாது என்பதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சரி, தவறு என்பதை மீண்டும் மீண்டும் கூறி குழந்தைகளைக் குழப்பாமல் எப்பொழுதாவது ஒருமுறை தேவை கருதிக் கூறலாம். நிச்சயமாக அந்தக் குழந்தை தனக்கு ஒரு அனுபவம் ஏற்படும் பொழுது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் என்று நம்புங்கள்.

15. ஒரு குழந்தை தவறே செய்யாமல் வளர முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். விழுந்து விழுந்து எழுந்தால் தான் நடக்க முடியும் என்பதைப்போல எந்த ஒரு விசயத்திலும் குழந்தைகள் தோற்றுபோகும் பொழுது அல்லது தவறாக செய்யும் பொழுது அக்குழந்தைக்கு புரியவைப்பதற்கு மட்டுமே நீங்கள் முயற்சி செய்யுங்கள். தவறே செய்யாத ஒரு குழந்தையை நீங்கள் பார்க்க முடியாது என்பதைத் தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். எனவே தவறு செய்யலாம், தப்பு செய்யலாம். ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்வதுதான் பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டு முதல் முறை இரண்டாம் முறை தவறு செய்யும் பொழுது குழந்தைகளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். ஆனால் குழந்தையை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி குழந்தைகளைக் கஷ்டப்படுத்த வேண்டாம்.

16. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து அவர் வேலைக்குச் சென்று சம்பாதித்து பிற்காலத்தில் தங்களுக்கு சோறு போடுவான் என்ற நம்பிக்கையில் வளர்க்கிறார்கள். ஆனால் குழந்தைகள் என்பவர்கள் ஒன்றும் ஏ.டி.எம் மெ´ன் கிடையாது. குழந்தைகள் நன்றாக நிம்மதியாக வாழவேண்டும் என்று மட்டுமே விரும்புங்கள். நீங்கள் இவ்வாறு நினைக்கும் பொழுது பெற்றோர்களைக் கவனித்துக் கொள்வதை அந்தக் குழந்தைகள் கட்டாயம் செய்வார்கள்.

17. குழந்தைகளை வீட்டிலேயே படிக்க வையுங்கள். பத்து வயது அல்லது பதினைந்து வயது வரை நீங்கள் வீட்டிலேயே கற்றுக் கொடுத்து வாருங்கள். பின்னர் என்டரி எக்ஸாம் அல்லது என்ட்ரன்ஷ் எக்ஸாம் என்று அழைக்கப்படும். பரீட்சைக்கு அனுப்பி வைத்து டிகிரி அல்லது டிப்ளமோ பட்டத்தினைப் பெறச் செய்யலாம். சமுதாயத்திற்காகவும் அரசாங்கத்திற்காகவும் ஒரு சான்றிதழை வாங்கிக் கையில் கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அந்தப் பிள்ளை நல்லபடியாக வாழும் என்று நம்புங்கள்.

18. பரஞ்சோதி மகான் என்ன கூறுகிறார் என்றால் பனிரெண்டு வயது வரை ஒரு குழந்தைக்கு எந்த மொழியையும் சொல்லிக் கொடுக்காமல் நாட்டு நடப்புகளைக் கூறாமல் இருந்தால் அந்தக் குழந்தை இந்த உலகில் அறிவாளியாக, புத்திசாலியாக உலகை ஆளுகிற, நல்ல எண்ணம் படைத்த ஒரு குழந்தையாக மட்டுமே வளரும், வாழும் என்று கூறியிருக்கிறார்.

19. பரஞ்சோதி மகான் எழுதிய நான் கடவுள் என்ற புத்தகத்தினை படியுங்கள். அதில் 170ம் பக்கத்தில் குழந்தைகளுக்கு எப்படி சிறப்பான கல்வியைத் தர முடியும் என்று அதில் விளக்கமாக அவர் கூறியிருக்கிறார்.

நண்பர்களே செரம்பான் பானு என்னும் மலேசியாவைச் சேர்ந்த இந்த சகோதரி ஒரு வாழும் உதாரணமாக இருந்து தன் குழந்தைக்கு வீட்டிலிருந்தே கல்வியைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறார். இவர் கலந்துரையாடும் பொழுது நிறைய விசயங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். பல்வேறு விசயங்களை அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். நான் அவரிடமிருந்து கேட்ட விசயங்களைத் தொகுத்து இங்கு 19 பத்திகளாக உங்களுக்குக் தொகுத்து கொடுத்துள்ளேன்

அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்கள் இதுபற்றி பேசும்பொழுது பல்வேறு விசயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புக்கு : தொலைபேசி எண் மலேசியா +60123619294. Email: banusuppiah@gmail.com

நான் இதுவரை பலரிடமும் வீட்டுக்கல்வி முறையைப் பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் யாரும் இதுவரை சரியான தீர்வு கொடுக்கவில்லை. ஒருவேளை நான் அப்படிப்பட்ட நபர்களை சந்திக்கவில்லையோ என்னவோ? சகோதரி செரம்பான் பானு அவர்கள் மட்டும் தான் இதைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்டு வீட்டுக்கல்வி முறையை நன்றாக செயல்படுத்தி வருகிறார். எனவே நமது கல்வித்திட்டத்திற்கு பானு வீட்டுக்கல்வி முறை என்று பெயர் வைத்திருக்கிறோம்.

படிக்காத மேதைகள்:

1. தமிழக முதல்வராக பல வருடங்கள் ஆட்சி புரிந்த கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்கள்.

2. விஞ்ஞானத்திலும் மோட்டார் துறையிலும் பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஜி.டி.நாயுடு ஐயா அவர்கள்.

3. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற தமிழ்சினிமாவின் மூலமாக இசைத்துறையில் அறிமுகமாகி பல்வேறு சாதனைகள் புரிந்த இசைஞானி இளையராஜா.

4. பல்வேறு சாதி, மதங்களை ஒன்று சேர்க்கப் பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள்.

5. உலகிற்கு பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்த கணிதமேதை இராமனுஜம்.

6. கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் என்னும் உலகமே வியக்கும் வண்ணம் கோவிலைக் கட்டிய இரண்டாவது சூரியவர்மன்.

7. எட்டு வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிய இரவீந்திரநாத் தாகூர்.

பானு வீட்டுக் கல்விமுறை

விரைவில் உலகின் பல்வேறு பாகங்களில் முற்றிலும் புதிதான ஒரு கல்விக் கூடத்தை நாம் அனைவரும் உருவாக்கவேண்டும். அதில் ஒரு ஆசிரியர் பாடம் கற்பிக்க 20 முதல் 50 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி பள்ளிப்பாடங்கள் நடத்தப்பட வேண்டும். மற்ற பள்ளிகளைப் போல இந்தக் கல்விக் கூடத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கிடையாது. ஒவ்வொரு குழந்தையின் மனநிலையையும், திறமையையும் பொறுத்து அக்குழந்தைக்கு ஏற்றவாறு பொருத்தமான கல்வியை கற்றுத்தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உதாரணமாக ஒரு குழந்தை தனக்குத் தூக்கம் வருகிறது என்று பாடவேளையில் கூறினால் அக்குழந்தை தூங்குவதற்கு அனுமதிப்பது தான் ஒரு ஆசிரியரின் வேலை. ஒரு குழந்தை பசிக்கிறது என்று கூறினால் அதற்கு உணவளிக்க வேண்டும். விளையாட வேண்டும் என்று விருப்பம் இருக்கும் பொழுது அக்குழந்தைக்கு அப்பொழுது விளையாட்டுப் பயிற்சியைத் தான் அளிக்கவேண்டும். குழந்தைகள் கேள்விகள் கேட்கும் பொழுது அப்போதைக்கு அந்தக் கேள்விக்கு மட்டும் சரியான பதில் கூறி அதைச் சார்ந்த பாடத்தினை ஆரம்பிக்க வேண்டும். ஒரு குழந்தை என்ன மனநிலையில் இருக்கிறதோ, அதற்குத் தகுந்தாற்போல, அதற்கு ஏற்றாற்போல கற்றுக் கொடுக்கும் பொழுது ஒரு குழந்தை நன்கு புரிந்து கொள்கிறது. தூக்கக் கலக்கத்தில் இருக்கும் பொழுது ஒருகுழந்தைக்குக் கணிதம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அதற்குக் கணிதம் புரிவதில்லை. கணிதம் கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ள மனநிலையின்போது அதைவிட்டுவிட்டு விளையாட்டைக் கற்றுக் கொடுத்தால் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது. எப்பொழுதுமே ஒருவருடைய மனநிலையை அறிந்துகொண்டால் தான் ஒரு விசயத்தைக் கற்றுக் கொடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உடனே இதற்கு நிறைய நேரமும், நிறைய பணமும் விரையமாகும் என்று நீங்கள் நினைத்துவிடவேண்டாம். இதைவிட நமக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? நமது குழந்தைகளுக்கு நல்ல விசயத்தைகற்றுக் தருவதை விட வேறு எதற்காக நாம் பணம் சம்பாதிக்கிறோம் ? எதற்காக சொத்து சேர்க்கிறோம்? என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கிறதோ, அதற்கு ஏற்ற கல்வியைக் கற்றுக் கொடுக்கும் பொழுதுதான் அவர்களால் அதை சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். கல்விமட்டுமன்றி நமது அன்றாடப் பணிகளைக் கூட நமது மனநிலைக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளும் பொழுது நிறைய வேலைகளை மிக எளிதாக செய்து முடித்துவிடலாம். உதாரணமாக நான் பல்வேறு விசயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் நேரம் ஒதுக்குகிறேன். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து தினசரி பயிற்சிவகுப்புகளை நாள் முழுவதும் நடத்தி வருகிறேன். இதனிடையே தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொள்ளும் பலருக்கும் கவுன்சிலிங் அளிக்கிறேன். இதற்கிடையே என் குடும்பத்தாரையும் கவனிக்க நேரம் ஒதுக்குகிறேன். இவ்வாறு பல வேலைகளை என்னால் சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஒரே காரணம் நான் எனது மனநிலைக்கு தகுந்தவாறு பணிகளை அமைத்துக் கொள்வதுதான். தினசரி செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டு எனது மனநிலைக்கு அப்போது எதைப் பிடித்திருக்கிறதோ அதை மட்டுமே செய்வேன். எப்பொழுதுமே நமது மனநிலை எந்த நிலையில் இருக்கிறதோ அந்த நிலையில் அதற்கேற்ற வேலையைச் செய்யும் பொழுது நமக்கு சக்தி விரயம் ஏற்படுவதில்லை. மேலும் நமக்கு உற்சாகம் பிறக்கிறது. எனக்கிருக்கும் பல்வேறு வேலைகளை என்னுடைய மனநிலை அந்த சமயத்தில் எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பார்த்துத்தான் செய்வேன். இவ்வாறு செய்யும் பொழுது நான் திட்டமிட்டிருந்த செய்யவேண்டிய வேலைகளின் வரிசையில் சற்று மாற்றம் இருக்கும். ஆனால் அதிகப்படியான வேலைகளை இதன் மூலம் செய்து முடிக்கிறேன். உதாரணமாக ஒரு வேலைக்கு இன்னொரு வேலை தான் ஓய்வு (யூeவிமி) என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யும் பொழுது மூச்சுக் காற்று ஒழுங்காக இருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.மனதுக்குப் பிடிக்காத வேலையைச் செய்யும் பொழுதோ அல்லது "மூட்' இல்லாதபோது ஒரு வேலையைச் செய்யும் பொழுதோ நமது உடலிலும் மனதிலும் சக்தி விரயாமாகிறது. அதனால் நமக்கு ஓய்வு தேவைப்படுகிறது. உதாரணமாக ஒரு கட்டிட வேலைசெய்யும் மேசன் (கொத்தனார்) சம்பளத்திற்காக வேலை செய்யும் பொழுது மெதுவாக வேலை செய்வார். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை செய்யும் பொழுது எனக்கு உடல் வலிக்கிறது. கை வலிக்கிறது என்று வேலையை நிறுத்திவிடுவார். ஆனால் அவர் தன்னுடைய வீட்டினைக் கட்டுபொழுதோ அதிகாலையிருந்தே ஆரம்பித்து இரவு வரை நேரம், காலம் பார்க்காமல் சந்தோசமாக வேலை செய்வார். அப்போது அவருக்கு கையும் வலிக்காது. காலும் வலிக்காது. ஒரு வேலையை விருப்பப்பட்டு மனதாரச் செய்யும் பொழுது சக்தி அதிகரிக்கிறது. அதே வேலையை விருப்பமில்லாமல் கடமைக்காகச் செய்யும்பொழுது சக்தி விரயமாகிறது. இந்த அடிப்படையில் நமது மனநிலைக்கு எற்றாற்போல் ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்பிய சமயத்தில் படிக்கும் பொழுது ஒருமுறை படித்தாலே நன்றாகப் புரிந்துவிடுகிறது. சக்தியை இழப்பது கிடையாது. மேலும் நமக்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. எனவே ஒரு குழந்தை எந்தக் கேள்வி கேட்கிறதோ அதற்குப் பதில் சொல்வது போல ஆரம்பித்து அந்தக் குழந்தைக்குப் பல்வேறு விசயங்களை நாம் கற்றுக் கொடுக்கும் பொழுது அந்தக் குழந்தை நன்றாகப் புரிந்துகொள்கிறது. உதாரணமாக, ஒருநாளில் அதிகாலை ஐந்து மணிமுதல் இரவு பனிரெண்டு மணிவரை பல்வேறு வேலைகளை நான் செய்து கொண்டு இருப்பேன். ஒவ்வொரு நாளும் காலையிலேயே இன்று என்னென்ன வேலைகள் செய்யவேண்டும் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொள்வேன். எல்லா வேலைகளையும் வரிசையாகப் பட்டியலிட்டபின் அதில் எந்த வேலையைச் செய்ய மனதிற்குப் பிடித்திருக்கிறதோ அந்த வேலையை மட்டும் செய்வேன். எந்த வேலை செய்ய மனதிற்கு அப்பொழுது விருப்பம் இல்லாமல் இருக்கிறதோ அந்த வேலையை ஒத்திப்போடுவேன். இவ்வாறு செய்வதால் அன்றைய தினத்திற்குள் நான் எல்லா வேலைகளையும் முடித்து விடுகிறேன். ஒரே ஒரு விசயம் என்னவென்றால் வேலைகளின் வரிசை தான் மாறியிருக்குமே தவிர மற்றபடி எல்லா வேலைகளும் முடிக்கப்பட்டு விடும். உதாரணமாக எனது மின்னஞ்சலுக்கு 100 ஈமெயில் வந்திருக்கிறது. அதற்கு பதில் சொல்லவேண்டும். 30 பேரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வேண்டும். வெளியிடங்களில் 5 பகுதிகளுக்கு நேரில் செல்ல வேண்டும் என்றபடி அன்றைய தினம் எனக்கு வேலைகள் இருந்தால் அதில் எனக்கு அப்போது எதைச் செய்யப் பிடித்திருக்கிறதோ அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடுவேன். அந்த வேலை எப்பொழுது போர் அடிக்க ஆரம்பிக்கிறதோ அதை நிறுத்திவிட்டு மிச்சம் உள்ள வேலைகளில் அப்பொழுது எதை பிடிக்கிறதோ அதை செய்ய ஆரம்பித்துவிடுவேன். எனவே ஓய்வே இல்லாமல் எல்லா வேலைகளையும் செய்யும் பொழுது எனக்கு சோர்வு ஏற்படுவதில்லை. அதே சமயம் எல்லா வேலைகளும் முடிந்துவிடுகிறது. ஆனால் நாம் இப்பொழுது இந்த வேலையை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மனதில் விருப்பமில்லாமல் மூட் இல்லாமல் கஷ்டப்பட்டு ஒருவேலையைச் செய்யும் பொழுது அந்த வேலை முடிய காலதாமதம் ஏற்படுகிறது. அது மட்டுமன்றி திறனும் குறைந்துவிடுகிறது. அதே போல பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுதோ அல்லது இரயிலில் பயணம் செய்யும் பொழுதோ பல்வேறு புத்தகங்களைப் பயணத்தின் போது படிப்பது என் வழக்கம். என் கைவசம் எப்பொழுதும் ஐந்தாறு புத்தகங்களைப் எடுத்துச் செல்வேன். ஏதாவது ஒரு புத்தகத்தினை அந்தச் சமயத்தில் எடுத்துப் படிப்பேன். அது பிடித்திருந்தால் மட்டுமே தொடர்ந்து தொடங்குவேன். இல்லையயன்றால் அதை வைத்துவிட்டு வேறு புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவேன். ஏதாவது ஒரு புத்தகம் அப்போதைய மனநிலைக்கு ஒத்து வருவதைப்பேல இருப்பதைப் படிக்க பிடிக்கும். அதைப் படித்து முடித்துவிடுவேன். நிச்சயமாக மற்றொரு நாள் மற்ற புத்தகங்களைப் படிப்பதற்கான மனநிலைவரும் பொழுது அவற்றைப் படிப்பேன்.

சரி நாம் இப்பொழுது என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பார்க்கலாம்

1. கர்ப்ப காலம் முதல் ஒரு குழந்தை பெற்றேடுக்கும் காலம் வரை ஒரு தாய் எவற்றையயல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டும். அவற்றைப் புத்தகமாகவும், ஆடியோகவாகவும், வீடியோகவாகவும், வடிவமைக்க வேண்டும் ஆரம்ப கட்டமாக இதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்க வேண்டும். பின்னர் பல்வேறு மொழிகளில் அதனை மொழி பெயர்க்கபட வேண்டும்.

2. குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை அந்தக் குழந்தைக்கு வீட்டிலேயே எதைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற கல்வித் திட்டத்தினை உருவாக்க வேண்டும்.

3. 5வயது முதல் 12 வயது வரை உள்ள காலகட்டத்தினை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. வீட்டிலிருந்த படியே பாடங்களை கற்பிக்கலாம் (அல்லது) 2. பள்ளிக்கு அனுப்பலாம். இந்த இடத்தில் பள்ளி என்று நாம் குறிப்பிடுவது உலகில் இப்பொழுது உள்ள பள்ளிகளை அல்ல நாம் உருவாக்கும் பள்ளிகள்.

இந்த மூன்று விசயங்களையும் நாம் கட்டமைக்கவேண்டும் எனில் அதற்கு நமக்குப் பல்வேறு விசயங்கள் தேவைப்படுகின்றன. அவை : 1. கல்வித் திட்டம், 2. இதை உருவாக்குவதற்கு நல்ல எண்ணம் உடைய ஆசிரியப் பெருமக்கள். 3 பொருளாதாரம், 4. நாம் அனைவரும் ஒன்று கூடி விவாதிப்பதற் கான ஒரு இடம். 5 . இணையதளம், 6 ஈமெயில், 7. தொலைதொடர்பு வசதி, 8. அலுவலர்கள்.

இதுபோன்ற பல்வேறு விசயங்கள் நமக்குத் தேவைப்படுகிறது. இதில் பங்கேற்க நல்ல உள்ளங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஏனென்றால் இதை நான் ஒருவன் மட்டும் உருவாக்கப் போவதில்லை. இந்த விசயத்தில் உடன்பாடு உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத உலக விசயங்களை மக்களுக்கு கற்றுக் கொடுக்க நினைக்கும் நல்ல உள்ளங்களும், பல நல்லவர்களும் ஒன்று சேர்ந்து தான் இப்பணியை நிறைவேற்றப் போகிறோம்.

ஆரம்ப கட்ட நிலையில் 11பேர் சேர்ந்த குழுவை தற்போது அமைத்து உள்ளோம்.

1. ஹீலர் பாஸ்கர் - மாஸ்டர் பாஸ்கர், பீஸ் ஓ மாஸ்டர் ஆகிய நான், 2. மலேசியாவில் செரம்பானில் வசிக்கும் சகோதரி பானு, 3. எனது மனைவி செல்வத்தரசி. இவர் மலேசியாவில் பல வருடங்களாக ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர், 4. வேலூரைச் சேர்ந்த சங்கீதா (வீட்டுக் கல்வி ஆர்வலர்). 5. திரு. தினகரன் அவர்கள். இவர் வேலூர் வி.ஐ.டி.யில் பணிபுரிந்து வருபவர். (வீட்டுக் கல்வி ஆர்வலர்). 6. திருமதி. தில்லைக்கரசி சிங்கப்பூர், (வீட்டுக் கல்வி ஆர்வலர்). 7. செல்வி. தேனுகா, ஸ்ரீலங்கா, 8. திருமதி. அனுராதா, ஸ்ரீலங்கா. 9. மலேசியாவில் வசிக்கும் ஒரு ஆசிரியை. 10. திருஞ்செங்கோட்டில் வசிக்கும் ஒரு ஆசிரியை. மலேசியாவில் வசிக்கும் ஒரு கல்வி அதிகாரி.

இவ்வாறு 11பேர் கொண்ட குழுவினை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இது ஆரம்ப கட்டப் பணிதான். உலகில் உள்ள பல்வேறு நல்ல உள்ளங்களும் நம்முடன் இணையும் பொழுது நமது குழு இன்னும் விரிவடையும். நாம் ஐந்தாண்டுகளில் இந்த உலகில் முற்றிலும் புதிய கல்விமுறையை உருவாக்கி அதை உலக மக்களுக்கு அதை இலவசமாக வழங்கவேண்டும் என்பதே நமது நோக்கம்.

பானு வீட்டுக் கல்விமுறை என்னும் இந்த வீட்டுக் கல்விமுறை கோவையை மையமாகக் கொண்டு இயங்கும். முதல்கட்ட நடவடிக்கையாக இதற்கான ஒரு இணையதளம் வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரியும் (ஈமெயில்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக முதல்கட்டப் பணியாக இந்த வீட்டுக் கல்வி முறையில் ஆர்வம் உள்ளவர்கள் உலகில் எந்த பாகத்தில் இருந்தாலும் அவர்கள் உடனே எங்களை தொடர்புகொண்டு உங்களது கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தக் கல்வித் திட்டத்தினை உருவாக்குவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள்.

இந்த முதல்கட்ட பணிகளைப் பொறுத்தவரை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. வீட்டுக் கல்வித்திட்டத்தினை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்பவர்கள் தங்களின் பெயர் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் ஈமெயில் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.

2. இந்தக் கல்வித் திட்டத்தில் பாடங்களை உருவாக்குவதில் நானும் உதவி செய்கிறேன் என்று கூறுபவர்களும் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி, ஈமெயில் முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யுங்கள். இரண்டாவதாக இந்தக் கல்வித் திட்டத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாம் அனைவரும் ஒன்றுகூடி விவாதித்து முடிவு செய்ய இருக்கிறோம். பின்னர் முடிவு செய்யப்பட்ட திட்டத்தினை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவோம்.

இறுதியாக, வரையறுக்கப்பட்ட ஒரு முழுமையான சிறந்த பாடத் திட்டத்தினை உருவாக்கியப்பின் உலக மக்கள் அனைவருக்கும் அதை இலவசமாக புத்தகவடிவில் டிவிடியில் மற்றும் இணையதளம், கூகுள் டிரைவ், யூடியூப்,பென்டிரைவ், ஹார்டுடிஸ்க், மின்னஞ்சல், கூரியர் என்று எந்தெந்த வழிமுறைகள் உள்ளனவோ அனைத்து வழிகளிலும் பல்வேறு மொழிகளில் கொடுக்க இருக்கிறோம்.

மேலும் இதுதொடர்பாக பெற்றோர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்த இருக்கிறோம். இந்த பாடத்திட்டத்தின் வழியாகப் படித்த குழந்தைகளுக்கு என்ட்ரி எக்ஸாம் எனப்படும் நுழைவுத் தேர்வை எழுதச் செய்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

வாங்க ! புதிய உலகத்தை ! புதிய கல்வியை ! புதிய சமூகத்தை, புதிய பரிமாணத்தை உருவாக்குவோம்!

உங்கள் பெயர் மற்றும் முகவரியை முதலில் பதிவு செய்யுங்கள் விரைவில் உங்களுக்குத் தேவையான கல்விமுறை தொடர்பான விசயங்கள் வந்து சேரும்.

இதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக கோவையில் கோவைப்புதூரில் ஒரு நாள் கூட்டம் ஒன்றை கூட்ட இருக்கிறோம். இந்த ஒருநாள் கூட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவு செய்வோம்.

2016 ஆம் ஆண்டில் ஜனவரி 30 ஆம் தேதி இது சம்பந்தமான முதல் கூட்டத்தினை நாம் கூட்ட இருக்கிறோம். ஜனவரி, ஏப்ரல், ஜீலை, அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களில் அந்தந்த மாதங்களில் கடைசி சனிக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும். அதாவது ஜனவரி 30, 2016 ஏப்ரல் 30 - 2016, ஜீலை 30-2016, அக்டோபர் 29-2016 ஆகிய நான்கு நாட்களை இப்பொழுது தேர்வுசெய்திருக்கிறோம்.

இவ்வாறு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கோவையில் ஒரு நாள் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு இக்கல்வித்திட்டம் குறித்து ஆலோசனை செய்து ஒரு முடிவு செய்வோம். இதில் பார்வை யாளர்களாகவும் கலந்து கொள்ளலாம் அல்லது ஆலோசனைகள் கூறுவதற்கும் வரலாம்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க 15 நிமிடங்கள் ஒவ்வொரு வருக்கும் அளிக்கப்படும். அனைவர் முன்னிலையிலும் 15 நிமிடங்களில் உங்கள் கருத்துக்களைக் கூறவேண்டும். நீங்கள் கூறும் கருத்து ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தால் உங்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படும். உங்கள் கருத்துக்கள் அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். புதிய கல்வித்திட்டத்தினை நாம் உருவாக்குவோம்! வீட்டுக்கல்வி முறைத்திட்டத்தினை உருவாக்குவதற்கு எனக்கு உந்து சக்தியாக இருந்து உதவிய, அந்த எண்ணத்தை எனக்கு தூண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

Web: selfeducationathome.com / Email: selfeducationathome@gmail.com

முகவரி : நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம், பானு வீட்டுக்கல்வி முறை, நெ.1 லக்ஷ்மி நகர், பரிபூர்ணா எஸ்டேட் அருகில், கோவைபுதூர். கோயமுத்தூர் - 641042. தமிழ்நாடு. இந்தியா. தொலைபேசி எண் : 8220667120, 8220667135.

கடந்த 250 வருடங்களாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சீக்ரேட் சொசைட்டி எனப்படும் இலுமினாட்டிகள் உலகில் உள்ள எல்லா நாட்டுக் கல்வித் திட்டத்தையும் மாற்றி அமைத்து வைத்திருக்கின்றனர். நமது குழந்தைகளை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லுகின்ற தரமற்ற கல்வியை வழங்கி வரும் அந்தக் குடும்பத்திலிருந்து நமது குழந்தைகளை காப்பாற்றி சிறந்த குழந்தைகளாக வளர்ப்பதற்கும், இந்த உலகினை நல்வழிப்படுத்துவதற்கும்,நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியினை அளிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள். நாம் பிறந்தோம். சாப்பிட்டோம் குழந்தை பெற்றுக் கொண்டோம். இறந்தோம் என்று இல்லாமல் இனிமேலாவது நல்ல குழந்தைகளை நல்ல சமுதாயப் பணிகளுக்கு அர்ப்பணியுங்கள். உங்கள் குழந்தையை உலகம் போற்றும் ஒரு உன்னதக் குழந்தையாக மாற்றவேண்டும் என்று உங்களுக்கு எண்ணமிருந்தால் நான் சொல்வதை வரிசையாக செய்யுங்கள்.

1. நான் நடத்தும் ஐந்துநாள் பயிற்சி முகாமிற்கு கணவனும், மனைவியுமாக வந்து கலந்து கொள்ளுங்கள்.

2. விபாசனா எனப்படும் பத்துநாள் தியான முகாமிற்கு கணவன், மனைவி இருவரும் சென்று வாருங்கள்.

3. டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் படியுங்கள்.

4. திருமதி. ஹேமா-சென்னை, திருமதி. சந்திரகலா -சேலம், பவுனம்மாள்-செஞ்சி, திருமதி. சாய்தேவி-கோவை ஆகியோரிடம் நேரிலோ, தொலை பேசியிலோ கலந்து உரையாடி அனுபவங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

5. குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் முன்னரே மேற்சொன்ன விசயங்களை செய்து முடித்துவிட்டு கர்ப்பம் தரிப்பது சிறந்தது.

6. குழந்தையின் 2 அல்லது 15 வயது வரை உங்கள் குழந்தைகளுக்காக முழுநேரத்தை ஒதுக்கி ஒரு தலை சிறந்த குழந்தையை உருவாக்குங்கள்.

7. அதன்பிறகு அந்தக் குழந்தையிடம் மகனே, மகளே நீ தனியயாருவனாக சென்று அல்லது தனியயாருத்தியாகச் சென்று இந்த உலகத்தை மாற்றி அமை என்று அனுப்பிவிடுங்கள்.

நமது குழந்தைகள் இனி உலகத்தை ஆளும் குழந்தைகள் நமது குழந்தைகளை இந்த உலகத்தில் அன்பு, கருணை, சந்தோசம், அமைதி, ஆரோக்கியம், சாந்தி, சமாதானம் ஆகியவற்றை உருவாக்கும் குழந்தைகளாக மாற்றவேண்டும்.

உலகத்தில் தலைசிறந்த கல்வி பின்லாந்து கல்வி.

உலகத்தில் தலைசிறந்த தொழில்நுட்பம் ஜெர்மன் தொழில்நுட்பம்.

உலகத்தில் தலைசிறந்த காதல் திட்டம் பிரான்ஸ் நாட்டில் உள்ளது.

உலகத்தில் தலைசிறந்த விருந்தோம்பல் மியான்மர் (பர்மா) நாட்டில் காணலாம்

இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விசயம் சிறந்த விசயமாக இருக்கிறது

இந்தக் கட்டுரையில் கல்வியைப் பற்றிப் பார்த்தோம். விரைவில் ஜெர்மன் தொழில் நுட்பத்தையும், பிரெஞ்சு காதலையும், பர்மாவின் விருந்தோம்பலையும் இது தவிர ஒவ்வொரு நாட்டிலுள்ள தலைசிறந்த விசயங்களையும் ஒவ்வொன்றாக நாம் பார்க்க இருக்கிறோம்.

ஆகவே இனிமேல் நமது குழந்தைகளை சிறந்த குழந்தைகளாக வளர்ப்பதற்கு நாம் முழு முயற்சி எடுப்போமாக!

வாழ்க கல்வி ! வாழ்க வையகம் ! வளர்க சமுதாயம் !
வாழ்க வளமுடன் ! நன்றி !